முடி வளர்ச்சியை மீட்டெடுக்கும் கற்றாழை…எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

0
328

முடி உதிர்தல் இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையாக மாறி வருகின்றது.

ஒவ்வொரு நாளும் நாம் அதிகளவு முடியை இழக்கிறோம்.

இனியும் காலம் கடத்தாமல் முடி வளர்ச்சியை மீட்டெடுக்க கற்றாழையை பயன்படுத்தலாம்.

கற்றாழை முடி வளர்ச்சிக்கு எப்படி உதவும் என்று இனி பார்க்கலாம்.

முடியை வளர செய்யும் கற்றாழை

உங்கள் கூந்தலை கற்றாழை ஜெல் உடனடியாக பட்டு போன்று மென்மையாக மாற்றி விடும்.

கற்றாழையில் உள்ள புரோட்டியோலைடிக் என்சைம் தலையில் உள்ள இறந்த செல்களை நீக்கி மயிர்கால்களுக்கு சக்தியை கொடுக்கும்.

கொட்டுன முடி காடு மாதிரி அடர்த்தியா வளரனுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்...வாரம் 2 தடவை பயன்படுத்துங்க | Benefits Of Aloe Vera For Hair Loss

கற்றாழையில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பொடுகு மற்றும் வறண்ட சருமத்தை போக்கி ஆரோக்கியமான சருமத்தை கொடுக்கிறது. இது கூந்தல் உதிர்வை குறைத்து முடி அடர்த்தியாக வளர பயன்படுகிறது.  

கற்றாழையில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பொருள் தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அழற்சி போன்றவற்றைப் போக்குகிறது.  

கொட்டுன முடி காடு மாதிரி அடர்த்தியா வளரனுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்...வாரம் 2 தடவை பயன்படுத்துங்க | Benefits Of Aloe Vera For Hair Loss

கற்றாழை பேக்

தேவையான பொருட்கள்

  1. தேங்காய் எண்ணெய்
  2. கற்றாழை ஜெல்
கொட்டுன முடி காடு மாதிரி அடர்த்தியா வளரனுமா? இந்த ஒரே ஒரு பொருள் போதும்...வாரம் 2 தடவை பயன்படுத்துங்க | Benefits Of Aloe Vera For Hair Loss

பயன்படுத்தும் முறை

  • தேங்காய் எண்ணெய்யுடன், கற்றாழை ஜெல்லை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
  • பிறகு மெதுவாக தலையில் தேய்த்து 1 மணி நேரம் மசாஜ் செய்து வர வேண்டும்.
  • பிறகு நீரில் அலசிக் கொள்ளுங்கள்.
  • இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • இதேவேளை, தனி கற்றாழை ஜெல்லையும் உச்சந்தலையில் தடவி 1 மணி நேரம் ஊற வைத்து தலை முடியை கழுவினாலும் ஆரோக்கியமான முடியை பெறலாம்.

முக்கிய குறிப்பு

கற்றாழை பயன்படுத்தும் போது தலையில் ஒவ்வாமை ஏற்படுவதை உணர்ந்தால் நிறுத்தி விடுங்கள். மேலும், புதிதாக இதனை பயன்படுத்த போகின்றீர்கள் என்றால் மருத்துவ ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். 

https://www.taatastransport.com/