பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய பெண்கள்! அதிரடி கைது..

0
112

அனுராதபுரம் – புபுதுபுர பிரதேசத்தில் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 06 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்ட போதே பொலிஸார் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

புபுதுபுர பிரதேசத்தில் நேற்று(16) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 14 கிராம் 220 கிராம் ஹெரோயினுடன் 04 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த சந்தேகநபர்கள் புபுதுபுர பிரதேசத்திலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.