கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு! வவுனியாவில் துயரம்

0
352

செட்டிகுளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் வீடொன்றுக்கு அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

செட்டிகுளம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

9 வயதுடைய சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிறுவன் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த நிலையில், விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

அதன்பின்னர், தாயும், அப்பகுதி மக்களும் சேர்ந்து சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.