குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து கொள்ளையிட்ட கொள்ளையர்கள் கைது!

0
118

கொழும்பு – வெள்ளவத்தை பகுதியில் தங்க நகைகளை கொள்ளையிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் வீதியில் செல்லும் நபர்களை ஏமாற்றி மயக்க மருந்து கலந்த பானங்களை குடிக்க கொடுத்து, அவர்கள் மயங்கிய பின்னர், தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு வரும் குழுவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது.

கொழும்பு மக்களுக்கு முக்கிய தகவல்; இப்படியும் நடக்கலாம் அவதானம்! | Important Information People Of Colombo Robbery

கைதான சந்தேகநபர்கள் மட்டக்களப்பு மற்றும் பதுளை பிரதேசங்களை சேர்ந்த 63 மற்றும் 64 வயதான நபர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விடுதிகளில் தங்கியிருந்து கொள்ளை

இவர்கள் கொழும்பில் தற்காலிக விடுதிகளில் தங்கியிருந்து இந்த கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, நாராஹென்பிட்டி மற்றும் எடேரமுல்ல பொலிஸ் பிரிவுகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுக்காக தேடப்பட்டு வந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.

கொழும்பு மக்களுக்கு முக்கிய தகவல்; இப்படியும் நடக்கலாம் அவதானம்! | Important Information People Of Colombo Robbery

அவர்கள் கைது செய்யப்படும் போது, வெள்ளவத்தை பிரதேசத்தில் கொள்ளையிட்டு விற்பதற்காக கொண்டு சென்ற தங்க நகைகளைபொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.  

எனவே இவ்வாறான கொள்ளையர்கள் தொடர்பில் பொதுமக்கள் எச்சரிக்கையுன் இருக்கவேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.