வாயு துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதி!

0
69

கதிர்காமம், தெட்டகமுவ பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் வேடிக்கையாக வாயு துப்பாக்கியால் சுட்டதில் ஐந்து வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாயு துப்பாக்கியால் இளைஞர் சுட்டபோது அது தீப்பிடித்து ஐந்து வயது சிறுவனின் தலையில் தாக்கியுள்ளது.

விளையாட்டு வினையானதில் சிறுவனுக்கு நேர்ந்த துயரம் | Tragedy Of The Boy In The Game

வைத்தியசாலையில் அனுமதி

அதில் பாதிக்கப்பட்ட சிறுவன் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் தெட்டகமுவயைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவனே காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவன் பாடசாலை ஒன்றில் முதலாம் ஆண்டில் கல்வி கற்று வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வருகின்றனர்.