வீதியை விட்டு விலகி ஓடைக்குள் வீழ்ந்த வான்..11 பேர் காயம், பெண்ணொருவர் மரணம்!

0
169

மத்துகம – மீகஹதென்ன பகுதியில் வேன் ஒன்று ஓடைக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு  கட்டுநாயக்கவில் இருந்து காலி நோக்கி பயணித்த வேன் ஒன்றே இன்று(16) காலை விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில்

விபத்தில் காயமடைந்தவர்கள் மீகஹதென்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக களுத்துறை நாகொட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த சோகம் | Vehicle That Ran Off The Road Into A Stream

இந்த விபத்து சம்பவத்தில் காலி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

பெண் மரணம்

இந்த விபத்தில் பெண்ணொருவர் மரணமடைந்துள்ளார். தன்னுடைய மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்துவிட்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (16) காலை 5 மணியளவில் உறவினர்களுடன் திரும்பிக்கொண்டிருந்தனர்.

இதன் போதே, சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கத்தால், வீதியை விட்டு விலகி, வான் விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.