பேருந்தை செலுத்திய பாடசாலை மாணவன்; நுவரெலியா பகுதியில் சம்பவம்!

0
165

நுவரெலியா பகுதியில் பாடசாலை மாணவன் ஒருவன், பஸ் ஒன்றை செலுத்திய புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

பாடசாலை சுற்றுலா ஒன்றிற்காக நுவரெலியா பிரதேசத்திற்கு சென்ற சந்தர்ப்பத்திலேயே, இந்த பஸ்ஸை குறித்த மாணவன் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தென் மாகாணத்திலிருந்து நுவரெலியாவிற்கு சென்ற வேளையிலேயே இந்த பஸ்ஸை, குறித்த மாணவன் செலுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.