குடிநீர் இன்றி தவிக்கும் சென்கிலயர் தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள்!

0
95

மலையக மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்கி கொண்டிருக்கும் நுவரெலியா வலய கல்வி காரியலத்தின் கீழ் இருக்கும் சென்கிலயர் தமிழ் மகா வித்தியாலயத்தில் பல வருடங்களாக குடி நீர் இன்றி மாணவர்களும் ஆசிரியர்களும் பல்வேறு சிரமங்களை தொடர்ச்சியாக சந்தித்து வருகின்றார்கள்.

குறித்த பாடசாலையில் சுமார் 600க்கு மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயில்வதுடன், 25 க்கு மேட்ப்பட்ட ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர்.

இந்த பாடசாலையில் ஒவ்வொரு வருடமும் சாதாரண தரம், 5 ஆம் ஆண்டு புலமை பரீட்சை போன்றவற்றில் சிறந்த பெறு பேறுகளை பெற்று நுவரெலியா மாவட்டத்திலே சிறந்து விளங்குகின்றது.

நீரின்றி அவதிப்படும் பாடசாலை; பெற்றோர் விடுத்த கோரிக்கை! | School Suffering Without Water Parents Request

இவ்வாறான நிலையில், குறித்த பாடசாலையில் குடிநீர் இன்றி மாணவர்கள் சிரமத்தை எதிர் நோக்குகின்றனர்.

இந்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்களும் கவனம் செலுத்த வேண்டுமென மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுக்கினறனர்.