கனடாவில் இருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த அவலம்! திடீரென மாயமாகிய வாகனம்

0
568

கனடாவிலிருந்து யாழ்ப்பாணம் வருவதற்காக  கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வந்திறங்கிய குடும்பம் ஒன்று சாப்பிடுவதற்காக கடைக்கு சென்ற நிலையில் அவர்களை ஏற்பவந்த வாகனம் திடீரென மாயமாகியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

கனடாவில் இருந்து வந்த குடும்பம் ஒன்று யாழ்ப்பாணம் செல்வதற்காக விமான நிலையத்தில் தரித்து நின்ற ஹயஸ் வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி தங்கள் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

இந் நிலையில் பயணத்தின் இடைநடுவில் உணவு உண்பதற்காக வாகனம் ஒரு கடையில் நிறுத்தப்பட்டது .

இதனையடுத்து அனைவரும் கடைக்குள் உணவு உண்டு விட்டு வெளியில் வந்து பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது.

ஏனெனில் வாகனத்தின் சாரதி  வெளிநாட்டுக் குடும்பத்தின் அத்தனை உடைமைகளுடனும் காணாமல் போயிருந்தார்.

கனடாவில் இருந்து யாழ் சென்ற குடும்பத்திற்கு இடைநடுவில் நேர்ந்த அவலம்! | Misfortune Befalls Family From Canada

இதனையடுத்து அதிர்ச்சியில் , நடு வீதியில் நிர்க்கதியாக நின்ற குடும்பம், பிறிதொரு வாகனத்தின் மூலம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்ததாகத் தெரியவருகிறது.

இச் சம்பவம் தொடர்பில் கனடா வானொலி மற்றும் ஊடகங்களில் மக்களின் விழிப்புணர்வுக்காக செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றதாக  கூறப்படுகின்றது.

அதேவேளை வெளிநாட்டிலிருந்து தாயகத்திற்கு வரும் மக்கள் அறிமுகமற்றவர்களின் வாகனங்களில் பயணிப்பதை தவிர்ப்பதன் மூலம் இவ்வாறான இழப்புக்களை தவிர்க்கலாம்.