யாழில் 21 லீட்டர் கசிப்புடன் சிக்கிய இரு பெண்கள்!

0
95

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை சுமார் 21 லீட்டர் கசிப்புடன் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன்போது கசிப்புடன் 27 வயது மற்றும் 42 வயதான இரு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைக்காக இளவாலை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை நேற்றைய திங்கட்கிழமை மாலை அச்சுவேலி பகுதியில் காங்கேசன்துறை விசேட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரால் , திருநெல்வேலி , குட்டியப்புலம் மற்றும் இணுவில் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் 60 மில்லிகிராம் , 55 மில்லிகிராம் மற்றும் 65 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதான நிலையில் அச்சுவேலி பொலிசாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.