திருமண நாள் அன்றே உயிரிழந்த மணமகன்; சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!

0
109

தமிழகத்தின்  சென்னையில் திருமணமான அன்றே மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த காளிதாஸ் மகன் 30 வயது சுரேஷ் குமார். இவர் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியைச் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் குடும்பத்தினர் சம்மதத்துடன் நேற்று முன்தினம் முருகன் கோவிலில் திருமணம் நடந்தது.

வரவேற்பு நிகழ்ச்சி 

அன்று மாலை வரவேற்பு நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சி முடிந்து பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் அனைவரும் அங்குள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் தங்கி இருந்தனர்.

இதன்போது அனைவரும் பேசிக் கொண்டிருந்த போது மணமகன் சுரேஷ்குமார் உடை மாற்றிக் கொண்டு வருவதாக அறைக்குள் சென்றுள்ளார். எனினும் வெகு நேரமாகியும் சுரேஷ்குமார் அறையில் இருந்து வெளியே வரவில்லை.

இதனையடுத்து சந்தேகமடைந்த உறவினர்கள் அவரது அறைக்கு சென்று பார்த்த போது அங்கு அவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனே சுரேஷ்குமாரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

மருத்துவமனையில் அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

திருமணமான அன்றே உயிரிழந்த மணமகன்; பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம் | Groom Who Died On The Day Of Marriage

இந்நிலையில் திருமணத்தன்றே மணமகன் இறந்த சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.