பரீட்சைக்கு தோற்றும் மாணவிகள் கட்டாயமாக கர்ப்பப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்..

0
364

பரீட்சைக்கு தோற்றும் மானைவிகள் கட்டாயமாக கர்ப்பப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை உகண்டாவிலுள்ள பல்கலைக்கழகமொன்று அறிவித்துள்ளது.

கம்பாலா சர்வதேச பல்கலைக்கழகத்தில் தாதிகள் மற்றும் மருத்துவிச்சிகள் பரீட்சைக்குத் தோற்றும் மாணவிகள் கட்டாய கர்ப்பப் பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்காக 5000 உகண்டா ஷில்லிங் (சமார் 485 இலங்கை ரூபா, 110 இந்திய ரூபா) கட்டணம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இது பாரபட்சமானதும் அபத்தமானதுமான நடவடிக்கை என பலரும் விமர்சித்தனர்.

இதையடுத்து, மேற்படி நிபந்தனையை பல்கலைக்கழகம் வாபஸ் பெறுவதாக பேராசிரியர் பிராங் கஹாருஸா அறிவித்துள்ளார்.