விளையாட்டு அமைச்சர் வீரவன்ச சாடல்!

0
101

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தசுன் சானக்கவை அழைத்து வந்து, ஊடகங்களுக்கு எதிரில் பகிடிவதை செய்துள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஸ்ரீ புஷபதான மண்டபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

குறைகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டிய அமைச்சர் 

Roshan Ranasinghe-ரொஷான் ரணசிங்க

விளையாட்டுத்துறை அமைச்சர், எமது கிரிக்கெட் அணியின் தலைவரை வரவழைத்து ஊடகங்களுக்கு முன்னால் பல்வேறு ஆலோசனைகளை வழங்குவதை பார்த்தேன்.

குறைப்பாடுகளை விசாரிக்கின்றார்.தவறுகளை பகிரங்கமாக சுட்டிக்காட்டுகிறார். இதுவும் பகிடிவதை கொடுப்பது போன்ற செயல். இப்படி செய்தால், கிரிக்கெட் அணி தலைவரிடம் குறைகள் இருந்தால், அவர் அதனை திருத்திக்கொள்ள மாட்டார். அவர் வலுவிழந்து போய்விடுவார். இது புரியாத காரணத்தினாலேயே பகிடிவதை செய்வது போன்று இப்படியான வேலைகளை செய்கின்றனர்.

Dasun Shanaka-தசுன் சானக்க

அதேபோல் பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதைக்கு எதிரான மாணவர்கள் சிலர் உணவு சாப்பிடும் போது, பகிடிவதைக்கு ஆதரவானவர்கள், சாப்பாட்டு தட்டை பிடிங்கி வீசி தாக்குதல் நடத்தியதாக செய்தி வெளியாகி இருந்தது.

 பல்கலைக்கழக அண்ணன்மாரின் அநாகரீகமான செயல்

Wimal Weerawansa-விமல் வீரவங்ச

இதனை பார்த்து எமக்கு எமது தாய்மார் மற்றும் பொதுச்சூழலில் கிடைத்த புரிதல் நினைவுக்கு வந்தது. சாப்பிடும் போது நாயாக இருந்தாலும் அதனை தாக்கக்கூடாது என்ற அறிவுரை நினைவுக்கு வந்தது. அவை எமக்கு கிடைத்த மரபுரிமைகள்.

எனினும் உணவு சாப்பிட்டு கொண்டிருக்கும் போது, மனிதனை அல்ல விலங்கை கூட தாக்குதவது அநாகரீகமான செயல் என்பதை வன்முறையாளர்களாக மாறியுள்ள பல்கலைக்கழகத்தில் இருக்கும் அந்த அண்ணன்மாருக்கு தெரியவில்லை.

இந்த சம்பவமானது தற்போதைய கல்வி முறை அழகற்ற பிள்ளைகளை உருவாக்கி வருகிறது என்பதை காட்டுகிறது. திறமையான, சவால்களை எதிர்கொள்ளும் கல்வியாளர்களை உருவாக்க வேண்டும்.

தோல்வியடையும் போது தளராத, வெல்லும் போது தலைக்கணம் கொள்ளாத பிள்ளைகளை உருவாக்க வேண்டும். எவ்வாறாயினும் இப்படியான திரிபுப்பட்ட சமூகத்துடன் நாம் இந்த பயணத்தை செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலைமையை மாற்ற முடியும் என நாங்கள் நம்புகிறோம் எனவும் விமல் வீரவங்ச மேலும் தெரிவித்துள்ளார்.