ஜனாதிபதி அலுவலகத்தில் இனி பால் தேநீருக்கு பதிலாக சாதரண தேநீர்; அதிரடி உத்தரவு!

0
111

ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தருபவர்களுக்கு இனி பால் தேநீருக்கு பதிலாக சாதரண தேநீரே வழங்கப்படும் என அறிவிக்கிப்பட்டுள்ளது.

செலவுகளை குறைக்கும் அடிப்படையிலே இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனை ஜனாதிபதி அலுவலகத்தின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய அறிவித்துள்ளார்.

அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தகவல் தந்த அவர் ஜனாதிபதி அலுவலகம் இனிமேல் சாதாரண தேநீரை மட்டுமே செயலகத்துக்கு வருபவர்களுக்கு வழங்க முடியும் என்று கூறியுள்ளார்.

பால் தேநீருக்கு பதிலாக இனி சாதரண தேநீர்; ஜனாதிபதி அதிரடி உத்தரவு! | Regular Tea Will Be Served Instead Of Milk Tea

கூட்டங்களில் பங்கேற்கும் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை மகிழ்விப்பதற்காக செலவழித்த பணத்தை குறைக்க வேண்டிய பொருளாதார நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.