டின்ஃபிஷ் பற்றிய செய்தி!

0
78

தரமற்ற டின்மீன்களை விற்பனை செய்த நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஆனால் தரமற்ற டின் மீன்களை விற்பனை செய்த கடைக்காரர்கள் மீது மட்டும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தணிக்கையில் தெரியவந்துள்ளது.

டின்மீன்கள் தொடர்பாக வெளியான செய்தி | News About Tinfish

 தரமற்ற டின் மீன்

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் பிரிவு 61 (3) (b) இன் படி, ஒரு தயாரிப்பு பயன்படுத்த முடியாதது அல்லது நுகர்வுக்கு தகுதியற்றது என்று கண்டறியப்பட்டால், அந்த தயாரிப்பு அல்லது பொருட்களின் இருப்பை தடை செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனடிப்படையில், நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஊடாக வர்த்தக அமைச்சினால் பரிசோதிக்கப்பட்டு அறிக்கைகள் அனுப்பப்பட்ட 06 டின்மீன் மாதிரிகளில் 05 தரமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் நிர்வாகம் கணக்காய்வுக்கு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் முறைப்படி சந்தையில் இருந்து மாதிரிகள் எடுக்கப்படாததால் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என நிர்வாகம் கணக்காய்வாளரிடம் குறிப்பிட்டுள்ளது.