சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலான முதலை; ஒன்று சேர்ந்து பிடித்த இளைஞர்கள்..

0
284

அஹங்கம கடலுக்கு வந்த சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறிய மிகப்பெரிய முதலையை இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பிடித்துள்ளனர்.

கடந்த 4 நாட்களாக அந்த கடலில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறிய 10 அடியிலான மிகப்பெரிய முதலை பிடித்த இளைஞர்கள் அதனை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த முதலையால் கடந்த 4 நாட்களாக வெளிநாட்டு பயணிகள் அங்கு வருவதனை தவிர்த்துள்ளனர்.

சுற்றுலா பயணிகளின் வருகை தராமையினால் அந்த பகுதியில் வாழும் குடும்பத்தினர் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் பல முறை வனவிலங்கு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்த போதிலும் அதிகாரிகள் அக்கறையின்மையால் இளைஞர்கள் பணியில் இறங்கியுள்ளனர்.

அதற்கமைய, நீண்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக இந்த முதலை இளைஞர்கள் வலைக்குள் சிக்க வைத்துள்ளனர்.

இதனை பார்வையிடுவதற்காக சுற்றுலா பயணிகளும் அவ்விடத்திற்கு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.