ஜனாதிபதியின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சி… 15 பேர் பொலிஸாரினால் கைது!

0
89

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டிற்குள் பலவந்தமாக பிரவேசிக்க முயற்சித்ததாக தெரிவித்து முன்னாள் நாடாளுமன்ற உறப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் கறுவாத்தோட்டம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணித் தலைவி ஹிருணிக்கா பிரேமச்சந்திர உட்பட கொழும்பில் வீதி நாடகத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் பெண்களக்கு எதிரான வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் நேற்று ஐ.நா. காரியாலயத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இதனை ஹிருணிக்கா பிரேமச்சந்திர உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அணியினர் முன்னெடுத்தனர்.

இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,