முகக்கவசம் அணியும்படி கேட்டுக்கொண்ட பேருந்து ஓட்டுநரை முகத்தில் குத்திய நபர்!

0
193

முகக்கவசத்தை அணியும்படி கேட்டுக்கொண்ட பேருந்து ஓட்டுநரை முகத்தில் குத்திய ஆடவர் நேற்று முன்தினம் (13 நவம்பர்) கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் SBS பேருந்து எண் 154இல் கேலாங் செராய்க்கு அருகே ஏறிய ஆடவரிடம் ஓட்டுநர் அடிப், முகக்கவசத்தை அணியுமாறு கேட்டுக்கொண்டுள்ள நிலையில், அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் குறித்து ஓட்டுநர் அடிப் செயல்பாட்டு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கும்போது பேருந்திலிருந்த மற்றொரு பயணி, அந்த ஆடவர் முகக்கவசத்தைப் போட்டுக்கொண்டதாக அவரிடம் கூறினார்.

பேருந்து முனையத்தைச் சென்றடைந்ததும் அந்த ஆடவர் அடிப்பை அணுகி அவரின் முகத்தில் குத்தினார். பேருந்திலிருந்த இரண்டு பயணிகள் காவல் துறையினர் வரும்வரை அந்த ஆடவரைத் தடுத்து நிறுத்தினர்.

மூக்கில் ரத்தம் கசிந்த நிலையில்,ஓட்டுநர் அடிப் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மருத்துவ சிகிச்சை பெற்று வீடு திரும்பிய அவர், தற்போது ஓய்வெடுத்துவருவதாக SBS Transit நிறுவனம் தெரிவித்தது.