பிக்பாஸ் வீட்டில் ஜனனிக்கும் அமுதவாணனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

0
184

தமிழகத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 5 சீசன் வெற்றியை தொடர்ந்து 6 சீசன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் 21 பேர் பங்குபெற்ற நிலையில் பலரையும் கவர்ந்த ஜிபி முத்து, தன் மகன் நினைவாக இருப்பதாக கூறி பிக்பாஸில் இருந்து வெளியேறினார். இதனை தொடர்ந்து எலிமினேஷனில் நான்கு பேர் வெளியேறியுள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் ஜனனி - அமுதவாணன் இடையே நடந்த பரபரப்பான வாக்குவாதம்! | Argument Janany And Amudavanan Bigg Boss House

வார இறுதியில் நடிகர் கமல்ஹாசன் தோன்றி கடந்த வார செயல்பாடுகள் பற்றி சக போட்டியாளர்களிடம் கலந்துரையாடினார். அப்போது, ஜனனி, அமுதவாணனின் பகடைக்காயாக செயல்படுகிறாரா? என விக்ரமனிடம் கேட்டார் கமல்ஹாசன்.

பிக் பாஸ் வீட்டில் ஜனனி - அமுதவாணன் இடையே நடந்த பரபரப்பான வாக்குவாதம்! | Argument Janany And Amudavanan Bigg Boss House

அப்போது, ஸ்வீட் கடை டாஸ்க்கில் ஜனனியை விளையாட அனுமதிக்காமல் பாதுகாப்பதாக சக போட்டியாளர்கள் அமுதவாணன் மீது குற்றச்சாட்டை முன்வைத்தனர். அப்போது, தான் யாருடைய கைப்பாவையாகவும் செயல்படவில்லை என ஜனனி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், அமுதவாணனுடன் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருக்கிறார் ஜனனி. அப்போது பேசிய அமுதவாணன்,”நான் என்ன உன்னை பிடித்து வைத்துக்கொண்டா இருக்கிறேன்?” என ஜனனியின் கேட்கிறார்.

பிக் பாஸ் வீட்டில் ஜனனி - அமுதவாணன் இடையே நடந்த பரபரப்பான வாக்குவாதம்! | Argument Janany And Amudavanan Bigg Boss House

இதற்கு ” நீ என்னை பிடிச்சு வச்சிட்டா இருக்க? எனக்கு விருப்பம் என்றால் நான் மற்றவர்களோடு பேசப்போகிறேன்” என்கிறார் ஜனனி.  

தொடர்ந்து பேசிய அமுதவாணன்,”எல்லாரும் தான் வேலைபாக்குறோம். அப்புறம் நான் உன்னை புடிச்சு வச்சிருக்கேன்னு சொல்றாங்க. பகடைக்காயா யூஸ் பண்றேன்னு சொல்றாங்க” என்கிறார். இதனை மறுத்த ஜனனி, “நீங்கள் என்னை யாரிடமும் பேசக்கூடாது எனச் சொல்லவில்லை” என்கிறார்.