விமல் வீரவன்சவின் கூட்டத்திற்கு கடும் எதிர்ப்பு; கண்டியில் பதற்றம்!

0
103

கண்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் குழுவினர் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.

கூட்டம் முடிவடைந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியேறிய போது, ​அங்கிருந்த இளைஞர்கள் அவர்களை கூச்சலிட்டு கடுமையாக திட்டியுள்ளனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மத்தியில் விமல் வீரவன்ச தனது மெய்ப்பாதுகாவலர்களுடன் கூட்டம் நடைபெற்ற மண்டபத்தை விட்டு வாகனத்தில் வெளியேறினார்.

இருப்பினும் கடும் எதிர்ப்பு காரணமாக வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் வெளியே வரமுடியாமல் மண்டபத்திற்குள் இருந்தனர்.

பின்னர் வாசுதேவ மற்றும் திஸ்ஸ விதாரணவும் எதிர்ப்புக்கு மத்தியில் தமது வாகனங்களில் ஏறிச் சென்ற வேளையில் இரு தரப்பினருக்கும் இடையில் பதற்றமான நிலைமை தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.