இரவு விருந்தினை இரத்து செய்த ஜனாதிபதி; அதிருப்தியில் ஆளும்கட்சியினர்

0
96

ஆளும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு நட்சத்திர ஹோட்டலில் வழங்க திட்டமிடப்பட்டிருந்த இரவு விருந்தினை இறுதி நேரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரத்து செய்ய தீர்மானித்துள்ளார்.

அரச செலவுகளைக் குறைப்பதாகக் கூறி, வரவு-செலவுத் திட்டத்தின் முடிவில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும் பாரம்பரிய தேநீர் வைபவத்தை இரத்துச் செய்ய அரசாங்கம் தீர்மானித்திருந்தது.

நட்சத்திர ஹோட்டலில் சூப்பர் டின்னர்

இதை அடுத்து, ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு வரவு செலவுத் திட்டம் தொடர்பான செயலமர்வை அலரி மாளிகளியில் நடத்த ஜனாதிபதி திட்டமிட்டிருந்தார். அதன் பின்னர் இன்று மாலை நட்சத்திர ஹோட்டலில் சூப்பர் டின்னர் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது .

எனினும் இது தொடர்பில் ஊடகங்கள் வெளிப்படுத்தியதையடுத்து எழுந்த எதிர்ப்பாளர்களை கருத்திற் கொண்டு ஜனாதிபதி இரவு விருந்தினை இரத்து செய்துள்ளதாக கூறப்படுகின்றது.

முடிவை மாற்றிய ஜனாதிபதி; அதிருப்தியில் ஆளும்கட்சியினர் | President Who Changed The Decision

அதேவேளை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வரவு செலவு திட்டம் குறித்து விளக்கமளிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.