அசீம் பற்றிய உண்மையை அடுக்கடுக்காக உடைத்த மைனா!

0
140

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அசீமின் உண்மையான குணம் குறித்த உண்மையினை மைனா நந்தினி ஓபமான பேசியுள்ளது ப்ரொமோவாக வெளியாகியுள்ளது.

அசீமின் உண்மையான குணம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் மூன்று வாரங்களாக பயங்கரமாக விளையாடி கோபத்தினை வெளிக்காட்டிய அசீம் கடந்த வாரம் மிகவும் வித்தியாசமாக காணப்பட்டார்.

பிரபல ரிவியில் கடந்த மாதம் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பித்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 பேர் விளையாடி வருகின்றனர். கடந்த வாரம் மகேஸ்வரி மக்களால் வெளியேற்றப்பட்டார்.

கடந்த வாரம் கமல்ஹாசன் தவறு செய்தவர்களை காரசாரமாக பேசியதோடு, வன்மையாக கண்டித்து பின்பு அரவணைத்தார். இதனால் குறித்த நிகழ்ச்சியின் சுவாரசியம் அதிகமாகி உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் அசீமின் மாற்றத்தினைக் கண்டு போட்டியாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மைனா நந்தினி அசீமின் உண்மையான குணத்தினை பேசியுள்ளார்.