இலங்கை பெண் ஜனனியை குறிவைக்கும் சக போட்டியாளர்கள்

0
149

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இலங்கை பெண் ஜனனி மற்றும் தனலட்சுமியை சக போட்டியாளர்கள் டார்கெட் செய்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

பிக்பாஸ்

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர். ஜிபி முத்து, சாந்தி, அசல், ஷெரினா, மகேஸ்வரி என ஐந்து பேர் வெளியேறியுள்ளனர்.

கடந்த இரண்டு வாரத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்கும் பயங்கர சண்டையை ஏற்படுத்தியது. இந்த வாரம் எந்த மாதிரியான டாஸ்க் பிக்பாஸ் கொடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.

இலங்கை பெண் ஜனனியை டார்கெட் செய்த போட்டியாளர்கள் | Bigg Boss Nomination This Week Janani

இந்த வார நாமினேஷன்

இந்த வாரத்தில் முக்கியமாக அசீம், ஜனனி, தனலட்சுமி இவர்களை போட்டியாளர்கள் குறி வைத்துள்ளனர். கடந்த வாரத்தில் தனலட்சுமி செய்த காரியம் ஒட்டுமொத்த பார்வையாளர்களிடையே கடும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாகவே உள்ளே இருக்கும் போட்டியாளர்கள் தனலட்சுமியை நாமினேஷன் செய்துள்ளனர். அதே போன்று ஜனனியையும் நாமினேட் செய்து வருகின்றனர்.

ஜனனி சில தருணங்களில் அளவுக்கு அதிகமாக கோபத்தை வெளிக்காட்டி வருவது, அவரது மற்றொரு முகமா என்ற பார்வையாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.