14 வயதில் கார்களை வாங்கிக் குவிக்கும் பிட்காயின் மில்லியனர்!

0
696

மலேசிய நாட்டவரான 14 வயது பிட்காயின் மில்லியனர் தமது கார் வரிசை குறித்து சமூக ஊடகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.

மலேசிய நாட்டவரான ஹாசிக் நஸ்ரி டிக்டோக் பக்கத்தில் 40,000 ஆதரவாளர்களை கொண்டுள்ளார். பிட்காயின் வர்த்தகத்தில் இருந்தே தாம் வருவாய் ஈட்டுவதாகவும் ஹாசிக் நஸ்ரி வெளிப்படுத்தியுள்ளார்.

தமக்கு சொந்தமாக பல கார்கள் இருப்பதாக ஹாசிக் நஸ்ரி கூற, உண்மையெனில் அது தொடர்பில் வெளிப்படுத்த வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்துள்ள ஹாசிக் நஸ்ரி,

2018ல் தமது பத்தாவது வயதில் Toyota IQ வாங்கியதாகவும் அதற்கென ஒரு பிட்காயினில் பாதி செலவிட்டதாகவும் கூறியுள்ளார். அதன் பின்னர் தமது 12வது வயதில் black Range Rover வாங்கியதாகவும், அதே ஆண்டு blue Ferrari FF வாங்கியதாகவும் கூறியுள்ளார்.

புதிதாக மஞ்சள் நிற Lamborghini Aventador வாங்கியதாகவும் ஹாசிக் நஸ்ரி தெரிவித்துள்ளார். ஆனால், இவரது வயதினை குறிப்பிட்டு, சட்டப்பூர்வமாக உங்களால் கார் ஒன்றை செலுத்த முடியாது, அவ்வாறிருக்க ஏன் இப்போதே வாங்க வேண்டும் என கேட்டுள்ளனர். மேலும், 14 வயதில் பிட்காயின் வர்த்தகத்தில் வருவாய் ஈட்ட முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.