பெண் அதிகாரியின் கழுத்தை பிடித்த உயர் போலீஸ் அதிகாரிக்கு ஆப்பு!

0
135

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை தடுத்து வைத்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து இரண்டு பெண்கள் பேரணியை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண்களை பாணந்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்ய தயாராகி கொண்டிருந்த போது, அவர்களை கைது செய்ய பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் முன்வரவில்லை என குற்றம்சாட்டி, சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கோபமாக நடந்து கொள்வதை குறித்த காணொளி வெளியானது.

பெண் அதிகாரியின் கழுத்தை பிடித்த உயர் பொலிஸ் அதிகாரிக்கு ஆப்பு! | Colombo Senior Officer Holding Female Police

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரின் நடத்தை தொடர்பில் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளி குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உதவி காவல்துறை அத்தியட்சகர் ஒருவரின் கீழ் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.