இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கான விதிகள்!

0
47

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலாப்பயணங்களை மேற்கொள்ளும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது தொடர்பில் கடுமாயான நடத்தை விதிமுறைகளை அறிமுக படுத்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது.

இலங்கையின் கிரிக்கெட் வீரரான தனுஷ்க குணதிலக்கவின் தவறான செயற்பாடு தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சிற்கும் துறைசார் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்தரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகள் | Regulations Imposed On Sri Lankan Cricket Team

அத்துடன், அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேலும் 12 விடயங்களை ஆராயவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

ஆராய்வு

முறையான அனுமதியின்றி இரவு நேரத்தில் அணியை விட்டு வெளியே சென்ற வீரர்கள், சுற்றுப்பயணத்தின் போது ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டமை, பயிற்சியாளர், மேலாளர் மற்றும் அணித் தலைவர் ஆகியோர் வீரர்களின் ஒழுக்கம் தொடர்பான தங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றினார்களா என்பது குறித்து ஆராய்தல், ஒரு அதிகாரப்பூர்வ அழைப்பு மாத்திரம் கிடைத்த போதிலும் வீரர்கள் எப்படி 16 விருந்துகளில் கலந்து கொண்டனர் என்பன உட்பட 12 விடயங்களை ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளது.