ஞானசார தேரரிடம் மூன்று மணிநேரம் விசாரணை!

0
54

கலகொட அத்தே ஞானசார தேரரிடம் நேற்று சுமார் மூன்று மணித்தியாலங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளது.

திலினி பிரியமாலி செய்ததாக கூறப்படும் பெரும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை, முன்னெடுக்கும் வகையிலேயே இந்த வாக்குமூலம் பெறப்படுள்ளது.

தேரரிடம் வாக்குமூலம்

ஞானசார தேரரிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை | Three Hours Of Interrogation By Gnanasara Thera

இந்த பாரிய மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் திரைப்படக் கலைஞர்கள் போன்ற பல முக்கியப் பிரமுகர்களிடம் இருந்து இதுவரை, குற்றப்புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இதுவரை கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் சந்தேகநபர் பிரியமாலி 2,510 மில்லியன் ரூபாவை மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்ற புலனாய்வு பிரிவு

ஞானசார தேரரிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை | Three Hours Of Interrogation By Gnanasara Thera

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரியமாலியுடன் தொடர்பில் இருந்தவர்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

திலினி பிரியமாலிக்கு எதிராக இதுவரை 14 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கடந்த வாரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.

மோசடி தொடர்பில், திலினி பிரியமாலி, இசுரு பண்டார, ஜானகி சிறிவர்தன மற்றும் பொரல்லே சிறிசுமண தேரர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.