சரியாக செய்யவில்லை என்றால் ரெட் கார்டு மூலம் அனுப்புவேன்… பிக் பாஸ் ஹவுஸ்மேட்களிடம் சாட்டையை சுழற்றிய கமல்!

0
526

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அலட்சியமாக இருப்ப இருப்பதை சுட்டிக்காட்டி கமல் கடுமையாக எச்சரித்துள்ளார். பிக் பாஸ் வீட்டில் உங்களுக்கு சம்பளம் கொடுக்கப்படுகிறது உங்களுக்கு கொடுக்கும் வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று கமல் கண்டித்தார்.

நீங்கள் உங்கள் வேலையை சரியாக செய்யாவிட்டால் நானே ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றுவேன் என்று கமல் எச்சரித்தார்.

சீசன் 5 பலவீனத்திலிருந்து பாடம் கற்ற பிக்பாஸ்

பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர்கள் எனக்கென்னவென்று எளிதாக கடந்து சென்றார்கள். எந்தவித கருத்தும் கூறாமல் கோஷ்டி சேர்ந்து கொண்டு அந்த போட்டியை, அதன் நோக்கத்தையே சிதைக்கும் வகையில் நடந்து கொண்டார்கள். இது சமூக வலைதளங்களில் கடுமையாக கண்டிக்கப்பட்டது. அப்பொழுது பிக் பாஸ் டீம் இந்த விஷயங்களை கணக்கில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்ததன் விளைவு பார்வையாளர் எண்ணிக்கை குறைந்தது. இதை சரி செய்யும் விதத்தில் சீசன் 6-ல் ஆரம்பத்திலிருந்து கண்டிப்பு காட்டுவதும் சுவாரசியமான விஷயங்களை கொண்டு செல்வதிலும் பிக் பாஸ் உறுதியாக இருப்பதை காணமுடிகிறது.

நெறியாளர் கமல்ஹாசனின் நேர்வழி

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் சில நாட்களிலேயே கோஷ்டி சேர்வதும் பெண்களை, திருநங்கைகளை, சக போட்டியாளர்களை மரியாதை குறைவாக நடத்தும் போக்கும், கண்டபடி பேசுவது, மைக் போடாமல் ரகசியம் பேசுவது, வேறு மொழியில் பேசுவது, அலட்சியமாக இருப்பது என தொடர்ந்ததை காணமுடிந்தது. இதை ஞாபகப்படுத்தி கமல் லேசாக சுட்டி காட்டினார். சிலரை மட்டும் கடுமையாக கண்டித்தார். பிக் பாஸ் சீசன் 6 சுவாரஸ்யமாக கொண்டு செல்ல வேண்டும் பார்வையாளர்களை அதிகரிக்க வேண்டும் என்பதில் கமல்ஹாசன் உறுதியாக இருப்பதை காண முடிந்தது.

மிக்சர் பார்ட்டிகள், கோஷ்டி சேர்ப்பவர்கள், நியாயவான்கள்

இந்த சீசனிலும் பிக் பாஸ் சீசன் 6 தொடங்கியதில் இருந்து போட்டியாளர்கள் கடுமையாக செயல்பட தொடங்கினர். வழக்கம்போல் வரும் மிக்சர் பார்ட்டிகளும் இந்த போட்டியில் இருப்பதை காண முடிந்தது. விஜய் டிவி கொழுந்துகள் நேரடியாக போட்டிக்கு வருவார்கள். அவர்கள் போட்டியாளர்களை எப்பொழுதும் தங்களுக்கு கீழ் கொண்டுவர முயற்சி செய்வார்கள். கோஷ்டி சேர்ப்பார்கள். அதையும் இந்த போட்டியில் காணமுடிந்தது.

இவை எல்லாவற்றையும் மீறி சிலர் நியாயமாக பேசுவதையும் அவர்கள் பாராட்டப்படுவதையும் காண முடிந்தது. இதற்கு முக்கிய காரணம் சமூக வலைதளங்கள், ஊடகங்கள் எனலாம். சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் சுட்டிக்காட்டியதை பிக்பாஸ் டீமும், கம்லும் சரியாக கவனித்து அந்தந்த வாரத்திலேயே தீர்த்து வைத்ததால் பிக் பாஸ் சீசன் 6 தொடர்ச்சியாக பொதுமக்களால் வரவேற்கப்படுகிறது, பார்க்கப்படுகிறது.

சுத்தம் பேணுவது சுத்தமாக இல்லை… சாட்டை சுழற்றிய கமல்

பிக்பாஸ் போட்டியாளருடைய மனநிலை வாரங்கள் செல்ல செல்ல மாறுபடும் இயல்பான தங்களது புத்தியை வெளிப்படுத்துவார்கள். அதையும் மீறி சிலர் எனக்கு என்னவென்று இருப்பார்கள். இதையெல்லாம் அனுமதிக்காமல் நடத்தி செல்வது நெறியாளருடைய வேலை. அந்த வேலையை கமல்ஹாசன் இந்த சீசனில் மிகச் சிறப்பாக செய்து வருகிறார். கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிக்கிறார். தட்டிக் கொடுக்க வேண்டிய இடத்தில் தட்டிக் கொடுக்கிறார். பிக் பாஸ் மொத்த டீமும் சமூகத்தின் உயர் மட்டத்திலிருந்து வருவதால் ஒருவித அலட்சியம், சுத்தம் பேணும் விஷயத்தில் ஒழுங்கீனமாக இருப்பது என கண்டபடி நடப்பதை பிக் பாஸ் வீட்டில் பார்க்க முடிகிறது. இதுவும் சமூக வலைதளங்கள் கண்டிக்கப்பட்டு வருகிறது.

அலட்சியமோ அலட்சியம்… நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம் ஒழுங்காக இருக்கணும்

கமல் தாங்கள் சாப்பிட்ட தட்டை கூட கழுவாமல், சாதத்துடன் சிங்கில் போடுவது, தங்கள் படுக்கை அறையை ஒழுங்குபடுத்துவதை செய்யாமல் கிளீனிங் டீம் வேலை அது என்று செல்வது. ஒரு சின்ன கிளாசை எடுத்து வைப்பதற்கு கூட அவர்கள் தான் செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது போன்ற மிகுந்த சோம்பேறித்தனத்தை பிக் பாஸில் காண முடிகிறது. இது அல்லாமல் பிக்பாஸ் டாஸ்குக்காக அழைக்கும் பொழுதும் லிவிங் ஏரியாவுக்கு வர சொல்லும் பொழுதும் ஒவ்வொருவரும் எனக்கு என்ன என்று அலட்சியமாக இருப்பதும் பின்னர் ஒவ்வொருவராக போய் அழைத்து வருவதையும் காண முடிகிறது. போன வாரமே அசீமை கண்டிக்கும் பொழுது, என்னால் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்ப முடியும் என்று லேசாக கமல் எச்சரித்தார்.

கமலின் விஸ்வரூபம்- வாயடைத்துப்போன பிக்பாஸ் போட்டியாளர்கள்

நேற்று போட்டியாளர்களிடம் பேசும் பொழுது வீட்டில் உள்ள பொருட்களை போட்டு உடைப்பது, பிக் பாஸின் விதிகளை மதிக்காமல் இருப்பது, வேற்று மொழிகளில் பேசுவது, ரகசியம் பேசுவது, எழுதிக்காட்டுவது, வேலைகளில் அலட்சியமாக இருப்பது போன்றவற்றை எந்த காலத்திலும் பிக்பாஸ் வீடு அனுமதிக்காது.

ஆயிரக்கணக்கானோர் வெளியில் காத்துக் கொண்டிருக்கும் பொழுது அடம்பிடித்து உள்ளே வந்தவர்கள் இங்கே வந்தவுடன் அலட்சியமாக செயல்படுவதை அனுமதிக்க முடியாது. உங்களுக்கு இங்கு சம்பளம் தரப்படுகிறது அப்படி இருக்கும் பொழுது உங்களுடைய வேலைகளில் அலட்சியம் காட்டுவதும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்களை செய்யாமல் ஒதுங்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு செய்தால் எனக்கு இருக்கும் பவரை பயன்படுத்தி நானே ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடுவேன்” என்று கமல் கடுமையாக எச்சரித்தார். இதை கேட்ட பிக்பாஸ் போட்டியாளர்கள் முகங்களில் ஈ ஆடவில்லை.