பற்றி எரிந்த வீடு; ஹீரோவான நபர்

0
685

கனடாவில் வீடு ஒன்று பற்றி எரிந்த போது அந்த வீட்டு மக்களை நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.

கனடாவின் அல்பர்ட்டா மற்றும் சஸ்கட்ச்வான் மாகாணங்களுக்கு இடையில் அமைந்துள்ள லொயிட்மின்ஸ்டர் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது மைக் சம்பேன்க் (Mike Champagne )என்ற நபரும் அவரது குடும்பமும் அதிகாலை வேளையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த போது வீடே தீப்பற்றிக் கொண்டுள்ளது.

இந்த சம்பவத்தை அவதானித்த அயலவர் விரைந்து செயல்பட்டு வீட்டில் உள்ளவர்களை காப்பாற்றியுள்ளார்.

வீடு பற்றி எரிவதை அவதானித்த அயலவர் வீட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று அனைவரையும் வெளியேறுமாறு எச்சரித்துள்ளார் .

அயலவரின் இந்த துணிச்சலான செயல் காரணமாக கம்பைன் மற்றும் அவரது மனைவி இரண்டு பிள்ளைகள் வீட்டில் இருந்த நாய் ஆகிய அனைவரையும் காப்பாற்ற முடிந்தது என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீட்டிலிருந்து மேலும் இரண்டு வீடுகளுக்கும் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் கூரை வழியாக தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும்  உயிர் பலி ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்திற்கான காரணங்கள் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன்  சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமது உயிர்களை காப்பாற்றுவதற்கு விரைந்து செயல்பட்ட அயல் அவரின் துணிச்சலான செயல் பாராட்டுக்குரியது எனவும் அவரை ஒரு ஹீரோவாக நோக்குவதாகவும் குறித்த நபர் தெரிவித்துள்ளார்

https://www.taatastransport.com/