இந்தியாவில் 91 பேர் உயிரிழந்த நிலையில்; இலங்கை அமைச்சர் இரங்கல்

0
359

குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 91 பேர் உயிரிழந்த நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்: இலங்கை அமைச்சர் இரங்கல் | Gujarat Bridge Collapse Sri Lankan Minister Regret

இந்த சம்பவம் நேற்று மாலை (30-10-2022) இடம்பெற்றுள்ளது.

“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன், மற்றவர்களை மீட்கும் பணிகள் வெற்றியடையும் என்று நம்புகிறேன்” என கூறியுள்ளார்.

இந்தியாவில் இடம்பெற்ற பாரிய அசம்பாவிதம்: இலங்கை அமைச்சர் இரங்கல் | Gujarat Bridge Collapse Sri Lankan Minister Regret

நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் 100 பேர் காணாமல் போயுள்ள அதேவேளை மச்சு ஆற்றில் நூற்றுக்கணக்கான மக்கள் மூழ்கினர்.

பகுதியளவு நீரில் மூழ்கிய தொங்கு பாலத்தில் இருந்து தப்பியவர்கள் தொங்கிக்கொண்டிருப்பதை சமூக வலைதள வீடியோக்களில் காணமுடிகின்றது.

உள்ளூரில் ஜுல்டோ குளம் என்று அழைக்கப்படும் குறித்த பகுதி பிரபலமான சுற்றுலாத்தலம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.taatastransport.com/