மகனை குணப்படுத்த போராடும் கனடிய தாய்!

0
301

கடுமையான நோய்வாய் பட்டுள்ள தனது மகனை குணப்படுத்துவதற்காக ஒன்றாரியோவை சேர்ந்த பெண் ஒருவர் பெருந்தொகை பணத்தை திரட்டி வருகின்றார் .

டோபா கூப்பர் என்ற பெண்ணே இவ்வாறு தனது இளைய மகனை குணப்படுத்துவதற்காக முகநூல் வழியாக ப நிதி திரட்டி வருகின்றார்.

Ethan Schachter என்ற இருபது மாதங்களேயான மகன் நிமலின் ராட் மையோபதி  எனும் நோயிலிருந்து காப்பாற்றுவதற்காக குறித்த பெண் முகநூல் வாயிலாக நிதி திரட்டி வருகின்றார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு இவ்வாறு பணம் வழங்குமாறு அவர் கூறியுள்ளார் இந்த மயோபதி என்னும் நோய் 50 ஆயிரம் பேரில் ஒருவருக்கு ஏற்படக்கூடிய மிக அரிய வகையிலான நரம்பியல் பிரச்சனை ஆகும்.

குறித்த சிறுவனை நாள் மென்று விழுங்கவோ சுவாசிக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

சாதாரண சளி ஏற்பட்டாலும் சிறுவனால் அதனை தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு உடல் பலவீனமடைந்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான ஒரு பின்னணியில் தனது மகனை குணப்படுத்தும் நோக்கில் குறித்த பெண் நிதி திரட்டி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகளுக்காக கனடிய தாயின் உருக்கமான செயல் | Mom Fundraises Nearly 80 000 For 20 Month Old Son

தனது மகனை குணப்படுத்துவதற்கான மருத்துவ செலவுகளுக்காக நிதி திரட்டி வரும் கூப்பர் இதுவரையில் சுமார் 80,000 டாலர்களை திரட்டியுள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு தடவை மருத்துவமனை சென்று திரும்பும் போதும் இந்த நோயை குணப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வெகுவாக உணர்வதாக கூப்பர் தெரிவித்துள்ளார்.