அடுத்த வெள்ளிக்கிழமை முதல் கட்டாயமாகும் நடைமுறை !

0
375

உடல் ஆரோக்கியம் மற்றும் வீதிகளில் ஏற்படும் நெரிசல்களை தவிர்க்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் பிரதி வெள்ளிக்கிழமையும் துவிச்சக்கர வண்டிகளில் கடமைக்கு வருவது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

உலக நகர தினத்தையொட்டி அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் இதனை பின்பற்றும் வகையில் வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்தது.

அடுத்த வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் திட்டம்

அதன்படி இந்த மாதம் 31ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இதற்கான திட்டம் நடைமுறையிலிருக்கும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் கட்டாயமாகும் நடைமுறை ! | Compulsory Practice On Fridays

அடுத்த வெள்ளிக்கிழமை இந்தத் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன் அதனையடுத்து அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் துவிச்சக்கர வண்டியில் சேவைகளுக்கு சமுகமளிக்கும் இந்த வேலைத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

மேலும் பிரதான வீதிகளை பயன்படுத்தும் அதே வேளை, குறுக்கு வீதிகளை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் நோக்கிலும் உடல் ஆரோக்கியம், வீதி நெரிசல்கள் ஆகியவற்றை தவிர்க்கும் ஒரு அம்சமாகவும் இந்த செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக மேற்படி அதிகார சபை தெரிவித்துள்ளது.

https://www.taatastransport.com/