ஜாம்பி போல் வேடமிட்ட ஈரானிய பெண்ணின் பித்தம் அம்பலம்!

0
477

சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில் தோன்றி அவர் மிகவும் சாதாரண பெண் போல் தோன்றினார்.

தெஹ்ரான் ஈரான் நாட்டின் தெஹ்ரானைச் சேர்ந்த தபார், பதேமே கிஷ்வந்த். இவர் ஏஞ்சலினா ஜூலியின் ஜாம்பி போல் தோற்றமளிக்கும் படங்களை வெளியிட்டு புகழ் அடைந்தார்.

தபரின் இந்த ஸ்டைலை டிரண்டாகும் செயலாக பலர் பார்த்தாலும், அவர் அக்டோபர் 5, 2019 அன்று ஈரானில் மற்ற மூன்று பெண் இன்ஸ்டாகிராம் செல்வாக்கு செலுத்துபவர்களுடன் கைது செய்யப்பட்டார்.

தபர் தன்னை ஏஞ்சலினா ஜூலிபோல் மாற்றிகொள்ள 50க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்ததாகக் கூறி உள்ளார். இதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டில் தபார் புகழ் பெற்றார்.

மேக்கப் மற்றும் அறுவை சிகிச்சை மூலம் தனது தோற்றம் பெரும்பாலும் பயங்கரமாக மாறியது என்று கூறினார். சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலில் தோன்றி அவர் மிகவும் சாதாரணபெண் போல் தோன்றினார்.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு, தபர் தொலைக்காட்சி நேர்காணலில் தோன்றினார். மேக்-அப் மற்றும் தந்திரங்கள் மூலம் தனது ஜாம்பி தோற்றம் வெளியானது என்றும் அது அறுவை சிகிச்சையின் விளைவாக இல்லை என்றும் அவர் வெளிப்படையாக உறுதிப்படுத்தினார்.

ஈரானிய பெண்ணின் பித்தலாட்டம் அம்பலம்! | Iranian Woman S Biliousness Exposed

தான் எப்போது புகழுடன் இருக்க விரும்பியதாகவும் அதற்கு “சைபர்ஸ்பேஸ் ஒரு சுலபமான வழியாக இருந்தது. ஒரு நடிகராவதை விட இது மிகவும் எளிதாக இருந்தது. இனி என் போனில் இன்ஸ்டாகிராம் கூட வைக்க மாட்டேன் இனி இன்ஸ்டாகிராமிற்கு திரும்ப விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

சமூக ஆர்வலர் மசிஹ் அலினெஜாட் தகவல்படி தபர் தனது 10 ஆண்டு சிறைத்தண்டனையில் 14 மாதங்களுக்குப் பிறகு சமீபத்தில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஈரானில் தெஹ்ரானில் ஹிஜாப் சரியாக அணியாததால் மஹ்சா அமினியின் துயர மரணத்தால் ஏற்பட்ட போராட்டங்களுக்குப் பிறகு தபர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.