தீபாவளி தினத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்!

0
465

நானுஓயாவில் இருந்து ஹட்டன் வரை சென்று கொண்டிருந்த சரக்கு இன்ஜின் மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானது.

ஹட்டன் புகையிரத நிலையத்தை அண்டிய பகுதியில் இன்று (24) அதிகாலை 05.00 மணியளவில் பாரிய குப்பை மேடு சரிந்து வீழ்ந்துள்ளது.

மூன்று மணிநேரம் தாமதம்
இதன் காரணமாக பாதையில் மூன்று மணிநேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதாக ஹட்டன் ரயில் நிலைய அதிபர் தெரிவித்தார்.

ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் குப்பைகள் அடங்கிய மண் மேடு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இதனால் இன்ஜின் வெற்றிடக் குழாய் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக ஹட்டன் நிலைய அதிபர் தெரிவித்தார்.

ஹட்டன் புறவழிச்சாலையில் வசிப்பவர்கள் புகையிரத பாதைக்கு அருகில் குப்பைகளை கொட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஹட்டன் நகரில் பெய்த கடும் மழை காரணமாக குப்பை மேடு சரிந்து புகையிரத பாதையில் விழுந்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.

புகையிரத பாதையில் இடிந்து விழுந்த குப்பை மேட்டை புகையிரத பராமரிப்புப் பணியாளர்கள் அகற்றியதையடுத்து, புகையிரத சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது