அரசாங்கத்தில் இணைவோரின் அரசியல் முடிவுக்கு வந்து விடும்-சஜித் பிரேமதாச

0
459

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து விலகி அரசாங்கத்தில் இணைய எவராது நினைத்தால், அதுவே அவர்களின் அரசியல் பயணத்தின் முடிவாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எதிர்வரும் தேர்தல்களில் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு பதிலளிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்தவர்கள் அரசாங்கத்தில் இணைய உள்ளனராம்.

அப்படி யாரும் செல்ல மாட்டார்கள் என்பதை கூறி வைக்க விரும்புகிறேன். அப்படி செல்பவர்கள் தமது அரசியலின் மரண சாசனத்திலேயே அவர்களே கையெழுத்தை இட்டுக்கொள்வார்கள்.

யார் நரித்தனமான அரசியலில் ஈடுபட்டுள்ளனர். யார் மக்களை பழிக்கொடுத்து விட்டு, மக்களின் தோளில் மீது ஏறி வாக்குகளை பெற்று பதவி சிறப்புரிமைகளுக்காக அரசாங்கத்தில் இணைந்துக்கொள்கின்றனர் என்பதை மக்கள் நன்றாக அவதானித்துக்கொண்டிருக்கின்றனர்.

22வது திருத்தச்சட்டத்தை ஏன் ஆதரித்தோம்

நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தவாறு சிறந்தவற்றுக்கு உதவி வருகின்றோம். 22வது திருத்தச்சட்டம் முழுமையானது அல்ல.

எனினும் 20வது திருத்தச்சட்டத்தை விடகொஞ்சம் சிறந்தது என்பதற்காக அதற்கு ஆதரவாக வாக்களித்தோம் எனவும் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.