21வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதில் பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரவேசம்

0
400

இலங்கை அரசியலில் கடந்த வெள்ளிக்கிழமையன்று 21வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து பொதுஜன பெரமுனவின் பசில் ராஜபக்சவின் தரப்பின் அடுத்த எழுச்சி எதிர்பார்க்கப்படுகிறது.

ரணில் விக்ரமசிங்க, ஆபத்துக்கு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டபோதும் அவருக்கு ஆதரவளிப்பதற்காக பொதுஜன பெரமுனவின் தரப்பில் இருந்து பலமான அழுத்தங்களை பசில் ராஜபக்ச ஏற்படுத்தி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, இதில் அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புக்களும் அடங்கும். அவரின் பரிந்துரையின் அடிப்படையிலேயே அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுக்களும் இருந்தன.

இந்நிலையில் அவர் அமெரிக்காவுக்கு சென்ற பின்னர் இடம்பெற்ற 21வது திருத்தத்தில் அவருக்கே பாதகம் வந்தபோது அவரால் அதனை தடுக்க முடியவில்லை.

பொதுஜன பெரமுனவில் இருந்தவர்கள் பசிலின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தபோதும், 21வது திருத்தம் நிறைவேற்றப்பட்டபோது, அதில் பிளவு ஏற்பட்டுவிட்டதோ என்று எண்ணத்தோன்றியது.

இதற்கு காரணம் மகிந்த ராஜபக்ச, 2க்கு ஆதரவாக வாக்களிக்காத போதும் சமல் ராஜபக்ச, சஷீந்திர ராஜபக்ச மற்றும் நாமல் ராஜபக்ச ஆகியோர் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

எனினும் இதனைக்கொண்டு பொதுஜன பெரமுனவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கருதமுடியாது.

இரட்டை குடியுரிமை

ஆனால், பசில் ராஜபக்சவின் இரட்டை குடியுரிமைக்கு எதிரான வெளிப்பாடுகள் வெளியாகியுள்ளன.

இந்த வாக்கெடுப்பில் பொதுஜன முன்னணியின் ஒரு பிரிவினர் வாக்களிக்காதுவிட்டிருந்தால், அவர்களின் சார்பான ரணிலுக்கு அது தோல்வியாக இருந்திருக்கும்.

பசில் ராஜபக்சவின் அடுத்தகட்ட நகர்வு
இதன் பின்னர் தமது பக்கபலமான ஆட்சிக்கும் பாதிப்பை கொண்டு வந்திருக்கும். எனவேதான் அந்த கட்சி பிரிந்திருந்து இந்த பிரச்சினையை தீர்த்திருக்கிறது என்றும் கருதமுடியும்.

இந்த நிலையில் பசில் ராஜபக்ச, இரட்டை குடியுரிமையை கொண்டவர் என்ற அடிப்படையில் அவருக்கு நாடாளுமன்றுக்கு செல்லமுடியாதபோதும், அவரின் செல்வாக்கில் நிச்சயம் அடுத்தகட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்படும் என்பதை எதிர்பார்க்கமுடியும் என்று கொழும்பின் அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.