இலங்கையில் பாடசாலை செல்வதை தவிர்க்கும் சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சியூட்டும் காரணம்

0
413

குறைந்த வருமானம் பெறும் வீடுகளில் உள்ள சிறுவர்களுக்கு அவர்களது குடும்பங்கள் உணவளிக்க முடியாததால், பெரும்பாலான மாணவர்கள் பாடசாலைகளுக்கு செல்வதை தவிர்ப்பதாக ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.

இலங்கையில் ஏழில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து வெளியேறுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு பாடசாலைகளில் உணவு கிடைப்பதில்லை என அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாடசாலைகளின் உணவுகளுக்கு 60ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார திவால் மற்றும் தொடர்புடைய காரணிகளால் குடும்பங்கள் மத்தியில் உணவுப் பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பெருமளவான குடும்பங்கள் 

குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் பெற்றோர் பெரும்பாலும் தினசரி கூலி வேலை செய்பவர்களாக உள்ளனர். சிலர் முச்சக்கர வண்டி சாரதிகளாக உள்ளனர். அவர்களின் 60-70 பிள்ளைகள்  மட்டுமே பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். சில வேளைகளில் பெற்றோர் தமது பிள்ளைகளை தமது தொழில்களில் உதவிகளுக்காக ஈடுபடுத்துகின்றனர் என்றும் பாடசாலைகளின் அதிபர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஒரு முட்டையின் விலை 50 ரூபாவாக இருக்கும்போது உணவுக்காக 60 ரூபாவை ஒதுக்குவது முறையானதா? என்று அதிபர்கள் வினவியுள்ளனர்.

நுவரெலியாவில் உள்ள 10 தோட்டங்களைச் சேர்ந்த 300 குடும்பங்களுடன் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பொருளாதார நெருக்கடியால் 96 வீதமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

செஞ்சிலுவைச் சங்க அறிக்கையின்படி, ஏழில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஏற்கனவே பாடசாலைகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

மேலும், 10 குடும்பங்களில் ஒருவர், நிலைமை மோசமடைந்தால், தங்கள் பி;ள்ளைகளும் பாடசாலைகளை தவிர்க்க வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

கல்வி அமைச்சின் கூற்றுப்படி, பாடசாலைகளுக்கு செல்லும் மாணவர்கள்; 4.1 மில்லியன் பேர் உள்ளனர், அவர்களில் 1.1 மில்லியன் பாடசாலை மாணவர்கள் மட்டுமே மதிய உணவைப் பெறுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில பாடசாலைகளில் ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உணவுகளை வழங்குகின்றனர். வேறு சில இடங்களில் தன்னார்வு நிறுவனங்கள், மாணவர்களுக்கு உணவுகளை வழங்கி வருகின்றன.