சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலனை!

0
406

சிங்கப்பூரில் பூச்சிகளை சாப்பிட அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கப்பூரில் பூச்சிகளை மனிதர்கள் சாப்பிடுவதற்கும் விலங்குகளின் தீவனத்துக்கும் அனுமதிப்பது குறித்து அந்நாட்டு அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுதொடர்பாக உணவு மற்றும் கால்நடை தீவன துறையிடம் அரசு கருத்துகளை கோரியுள்ளது.

இதற்கு அனுமதி கிடைத்தால் வண்டுகள், தேனீக்கள் போன்ற பூச்சிகளை சிங்கப்பூர் மக்கள் உணவாக உட்கொள்ள முடியும்.

பிரபல நாடொன்றில் பூச்சிகளை சாப்பிட அனுமதி? | Allowed Eat Insects Singapore Govt Consideration

இந்த பூச்சிகளை நேரடியாகவோ அல்லது எண்ணையில் பொரித்த திண்பண்டங்களாகவோ சாப்பிட முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பூச்சிகளை உணவாக உட்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய யூனியன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளிடம் இருந்து இது தொடர்பான நடைமுறைகளை பெற்றுள்ளதாக சிங்கப்பூர் உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.

முழுமையான அறிவியல் பூர்வ ஆய்வை மேற்கொண்டு சில குறிப்பிட்ட பூச்சி இனங்களை உணவாக உட்கொள்ள அனுமதிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் உணவு பாதுகாப்பு துறை கூறியுள்ளது.