கண்ணில் வரிசையாக 23 லென்ஸ்களை வைத்திருந்த பெண்!

0
410

கடந்த செப்டம்பர் 13ஆம் திகதி சமூக வலைத்தள பக்கத்தில் கேடரினா குர்தீவா (Katerina Kurdieva) என்ற அமெரிக்க கண் மருத்துவர் காணொளி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த காணொளியில் தன்னிடம் சிகிச்சை பெற வந்த பெண்ணின் கண்ணில் இருந்து வரிசையாக 23 காண்டாக்ட் லென்ஸ்களை கேடரீனா வெளியே எடுப்பது பதிவாகியுள்ளது.

கருத்து

அந்த காணொளியின் மீது “ஒருவரின் கண்களில் இருந்து 23 காண்டாக்ட் லென்ஸ்கள் வெளியே எடுக்கப்பட்டது. எனது மருத்துவமனையில் நிகழ்ந்த உண்மை சம்பவம். உங்களின் லென்ஸ்களுடன் என்றும் தூங்கவே தூங்காதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வீடியோவில் “ஒருவர் இரவில் தனது காண்டாக்ட் லென்ஸை எடுக்க மறந்துள்ளார். லென்ஸை கண்ணில் இருப்பதையும் மறந்து மீண்டும் காலையில் புதிய லென்ஸை போட்டுள்ளார். இப்படியே 23 நாள்களாக தொடர்ந்து செய்து வந்துள்ளார். இது ஒரு அரிய சம்பவம். எனது மருத்துவமனையில் நேற்று (அதாவது செப். 12 ) அனைத்து லென்ஸ்களையும் பாதுகாப்பாக வெளியே எடுத்தேன்” என பதிவிட்டுள்ளார்.

வரிசையாக 23 லென்ஸ்களை கண்ணில் வைத்திருந்த மூதாட்டி | An Old Woman Who Had 23 Lenses In Her Eye In A Row

மருத்துவர் கேடரினா,”நான் அனைத்து காண்டாக்ட் லென்ஸ்களையும் கவனமாகப் எடுத்தேன், மொத்தம் 23. காண்டாக்ட் லென்ஸ்களைப் பிரிக்க, நகைக்கடைக்காரர்கள் பயன்படுத்துவதை போன்ற உபகரணத்தை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஒரு மாத காலமாக, கண்ணிமைக்கு அடியில் தேங்கிய அவை, ஒன்றுடன் ஒன்றாக நன்று ஒட்டியிருந்தது” எனக் குறிப்பிட்டுள்ளார்.