லாட்டரியில் ஜெயிப்பது எப்படி?.. 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்த தாத்தா!

0
741

அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக லாட்டரி டிக்கெட்களில் வெற்றி எண்களை ஆராய்ந்து ஜாக்பாட் அடித்திருக்கிறார் 77 வயதான தாத்தா ஒருவர். இது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

லாட்டரி

அமெரிக்காவில் அரசு அனுமதியுடன் லாட்டரி டிக்கெட் விநியோகம் நடைபெற்று வருகிறது. தங்களது அதிர்ஷ்டத்தை பரிசோதிக்க விரும்பும் நபர்கள் இந்த லாட்டரிகளை வாங்கும் வழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். அதேநேரத்தில் சில சமயங்களில் விபத்து போல சில நபர்களுக்கு அதிர்ஷ்டம் அடிப்பதையும் பார்த்திருக்கிறோம். ஆனால் அனுபவத்தை கொண்டு கணக்குப்போட்டு வெற்றிபெற்றவர்களை பார்ப்பது ரொம்பவே அபூர்வம் தான். ஆனால், அதுவும் நடக்கக்கூடியது தான் என நிரூபித்திருக்கிறார் அமெரிக்காவை சேர்ந்த முதியவர் ஒருவர்.

அமெரிக்காவின் பால்டிமோர் மாகாணத்தின் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த இவர் கடந்த செப்டெம்பர் 16 ஆம் தேதி உள்ளூரில் இருக்கும் கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார். அப்போது அங்கு லாட்டரி டிக்கெட் ஒன்றையும் அவர் வாங்கியுள்ளார். தன்னுடைய 20 வருட அனுபவத்தில் இருந்து 5 எண்களை உள்ளீடு செய்திருந்ததாக அவர் கூறியுள்ளார். அதன்பிறகு வீட்டுக்குத் திரும்பிய அவர் தனது வழக்கமான வேலைகளில் ஈடுபட துவங்கியுள்ளார்.

அடுத்த நாள் அவர் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த போது லாட்டரியின் ஜாக்பாட் எண்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அப்போது தான் குறிப்பிட்டிருந்த எண்ணுக்கு ஜாக்பாட் அடித்திருப்பதை அவர் அறிந்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “நான் கடந்த 20 ஆண்டுகளாக லாட்டரியில் வெற்றிபெறும் எண்களை கவனித்து வருகிறேன். அதன் அடிப்படையிலேயே வெற்றி எண்களை கணித்தேன். டிவியில் ஜாக்பாட் எண்களை அறிவித்தபோதே அதை நான் அறிந்துகொண்டேன். ஏனெனில் நான் எளிதில் எண்களை மறப்பதில்லை” என்றார்.

man analysis of winning lottery numbers earns him 50000 USD

50 ஆயிரம் டாலர்

தான் தேர்ந்தெடுத்த நம்பர்கள் அதுதான் என அவருக்கு தெரிந்தும் சந்தேகம் காரணமாக லாட்டரி நிர்வாகத்தை போன் மூலமாக அழைத்து விபரத்தை கேட்டிருக்கிறார். அதன்மூலம் தான் வெற்றிபெற்றதை உறுதிப்படுத்தியுள்ளார் அவர். இதுபற்றி பேசுகையில், “வழக்கமாக நான் தேர்ந்தெடுக்கும் 5 எண்களில் 4 எண்கள் பொருந்தும். உண்மையை சொல்லப்போனால் 5 எண்களும் பொருந்தும் என ஒருபோதும் நான் நினைத்ததில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக இந்த முறை நான் 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வென்றுள்ளேன்” என்றார்.