பேய் வேடமணிந்து குழந்தைகளை மிரட்டிய ஊழியர்கள் !

0
387

அமெரிக்காவில் காப்பகத்தில் பேய் வேடமிட்டு குழந்தைகளை அச்சுறுத்திய ஊழியர்கள் 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஹாலோவீன் கொண்டாட்டங்கள் பிரபலம் வாய்ந்தவை.

பொதுமக்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பேய், பிசாசு மற்றும் விகார தோற்றம் கொண்ட வேடமிட்டு தெருக்களில் வலம் வருவார்கள்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாத இறுதி நாளில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் ஆண், பெண் வேற்றுமையின்றி அனைவரும் பல்வேறு வேடங்களை இட்டு மகிழ்வார்கள்.

அமெரிக்காவின் மிஸ்ஸிஸிப்பி மாகாணத்தில் குழந்தைகள் காப்பகம் ஒன்று அமைந்துள்ளது. இதில், பல்வேறு தரப்பு மக்களும் தங்களது குழந்தைகளின் பாதுகாப்பை முன்னிட்டு, அவர்களை காப்பகத்தில் விட்டு விட்டு வேலைக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில், அந்த காப்பகத்தில் உள்ள ஊழியர்கள், பேய் போன்ற வேடம் போட்டு கொண்டு, குழந்தைகளின் முன்னே சென்று அவர்களை பயமுறுத்தி உள்ளனர்.

அது விளையாட்டுக்காகவோ அல்லது உள்நோக்கத்துடனோ செய்யப்பட்டனவா என்பது தெரியவில்லை. காலையில் சிற்றுண்டி சாப்பிட மேஜையில் அமர்ந்து இருந்த குழந்தைகளையும் ஊழியர்கள் பயமுறுத்தி உள்ளனர்.

இதனால், குழந்தைகள் அச்சத்தில் அலறியபடி இருந்துள்ளனர். இந்த வீடியோ வைரலான சூழலில், சமூக ஊடகத்தில் அதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து காப்பக ஊழியர்கள் 4 பேர் பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.  

பேய் வேடமிட்டு குழந்தைகளை அச்சுறுத்திய 4 ஊழியர்களுக்கு நேர்ந்த நிலை! | 4 Employees Who Children By Dressing Up As Ghosts