குழந்தை பெற்றுக்கொண்டதால் சிக்கலில் மாட்டிய விக்கி – நயன்

0
707

 நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றதில் விதிகளை மீறியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ள நிலையில்  வர்களிடம் விளக்கம் கோரவுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விக்கி – நயன் இருவரும் ஜோடி நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் 9ஆம் தேதியன்று இருவருக்கும் சென்னை அருகே திருமணம் நடைபெற்றதை அடுத்து  இருவரும் ஹனிமூன் கொண்டாடுவதற்காக தாய்லாந்து நாட்டிற்கு சென்றனர்.

குழந்தை குறித்த அறிவிப்பு

பின்னர் இந்தியா திரும்பிய நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி மீண்டும் ஸ்பெயின் நாட்டிற்கு சென்றநிலையில் தங்களது ட்விட்டர் பக்கத்தில் இரட்டை குழந்தை பிறந்திருப்பதாகவும், தாங்கள் அம்மா, அப்பா ஆகிவிட்டோம்,என தெரிவித்துள்ளனர்.

அவர்களின் இந்த அறிவிப்பு திரைவட்டாரத்திலும் அவர்களது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தை பெற்றுக்கொண்டதால் சிக்கலில் சிக்கிய நயன்தாரா - விக்னேஷ் சிவன்! | Nayanthara Got Into Trouble Due To Having A Child

இந்த நிலையில் விக்கி – நயன்தாரா ஜோடி விதிகளை மீறி வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இரட்டை குழந்தை தொடர்பாக நயன்தாரா விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வாடகை தாய் மூலம் குழந்தை – விதிமுறைகள்

தமிழகத்தில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் கீழ்வரும்  விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்,

  •  திருமணமாகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும் 
  •  தம்பதியில் ஒருவர் குழந்தைப்பேறுக்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும்
  • தம்பதிக்கு வாடகைத்தாய்க்கும் தகுதிச் சான்றிதழ் கட்டாயம்
  •  ஒரு பெண், ஒரு முறைதான் வாடகைத்தாயாக இருக்க முடியும்
  • நெருங்கிய உறவுகள் மட்டுமே வாடகைத்தாயாக இருக்க வேண்டும்
  • வாடகைத்தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்

மேற்கண்ட விதிமுறைகளை நடைமுறையில் உள்ள நிலையில் இவற்றை விக்கி- நயன்தாரா ஜோடி பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேசமயம் மேற்கண்ட விதிகளை மீறியுள்ளதால் விக்கி – நயன்தாரா ஜோடி மீது வழக்குப்பதிவு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.