கனடாவில் உயர்வடையும் பெட்ரோல் விலை!

0
394

கனடாவில் பெற்றோலின் விலை உயர்வடையும் என அறிவிக்கப்படவுள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தில் நாளைய தினம் பெற்றோலின் விலை லீற்றருக்கு 10 சதத்தினால் உயர்வடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

றொரன்டோ பெரும்பாக பகுதியில் தற்பொழுது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை சராசரியாக 152.9 சதங்களாக காணப்படுவதுடன் நாளை நள்ளிரவுடன் சராசரி விலை 162.9 சதங்களாக உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த பத்து ஆண்டு காலத்தில் இவ்வாறு ஒரே நாளில் பெரிய தொகை அதிகரிப்பு பதிவான மூன்றாவது சந்தர்ப்பமாக இது கருதப்படுகின்றது.

வாக்கூவர் மெட்ரோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு லீற்றர் பெற்றோலின்விலை 241.9 சதங்களாக பதிவாகியுள்ளது.

இது வட அமெரிக்காவில் பதிவான மிக அதிக விலை என்பது குறிப்பிடத்தக்கது. மானிடோபா உள்ளிட்ட ஏனைய பகுதிகளிலும் பெற்றோல் விலை உயர்வடைந்துள்ளது.

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் எரிபொருளின் விலை குறைவாக காணப்பட்ட நிலையில் நாளைய தினம் ஒரு லீற்றர் பெற்றோல் 10 சதங்களினால் உயர்த்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.