ஆபத்தில் சிக்கிய உள்ளூர் சுற்றுலா பயணிகள்!

0
92

கற்பிட்டியில் கடல் நீர் கசிவு காரணமாக ஆபத்தில் சிக்கிய படகிலிருந்த உள்ளூர் சுற்றுலா பயணிகள் 38 பேரை இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்றைய தினம் (01-10-2022) இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்துக்காக பதிவுசெய்யப்பட்ட குறித்த இழுவைப்படகு, கல்பிட்டியிலிருந்து பத்தலங்குண்டு தீவுக்கு பயணித்தபோது, அடிப்பகுதியில் இருந்து படகினுள் கடல் நீர் கசிந்துள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடலில் மூழ்கும் அபாயத்தில் இருந்த இழுவை படகு குறித்து அதன் உரிமையாளர் கல்பிட்டி கடற்படை படகு தளத்திற்கு நேற்று பிற்பகல் அறிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ளூர் 38 சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படவிருந்த பேராபத்து! | Sri Lankan Navy Rescued 38 Tourists Safely Boat
இலங்கையில் உள்ளூர் 38 சுற்றுலா பயணிகளுக்கு ஏற்படவிருந்த பேராபத்து! | Sri Lankan Navy Rescued 38 Tourists Safely Boat

இந்த அறிவிப்பிற்கு இணங்க உடனடியாக செயற்பட்ட கடற்படையினர், வடமேற்கு கடற்படை கட்டளைப் பிரிவின் இரு படகுகளையும், இலங்கை கடலோர காவல்படையின் கண்காணிப்பு படகு ஒன்றையும் சம்பவ இடத்துக்கு அனுப்பினர்.

அதன் பிரகாரம் அப்படகுகளின் ஊடாக, விபத்தில் சிக்கிய இழுவைப் படகில் இருந்த, 6 பெண்கள் மற்றும் 32 ஆண்கள் உட்பட 38 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு கற்பிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.