தான் இறந்து விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிந்து கொண்ட கனேடிய பெண்!

0
273

கனடாவின் சஸ்கட்ச்வானைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் மரணித்து விட்டதாக அதிகாரபூர்வாக அறிந்து கொண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

கோரின் சாட்ஸ் என்ற பெண்ணே இவ்வாறு அதிர்ச்சியடைந்துள்ளார். சுகாதாரத்துறையில் பணியாற்றி வரும் சாட்ஸ், பாடசாலையொன்றை அண்மையில் ஆரம்பித்துள்ளார்.

தொழில் காப்புறுதி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பம் செய்த போது சாட்ஸ் ஏற்கனவே இறந்து விட்டதாக ஆவணங்களில் பதியப்பட்டுள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பு சாட்ஸை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. தாம் உயிருடன் இருப்பதனை நிரூபிப்பதற்கு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க நேரிட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.

கடந்த 2019ம் ஆண்டு ஜுலை மாதம் சாட்ஸ் உயிரிழந்து விட்டதாக ஆவணங்களில் பதியப்பட்டுள்ளது.

கனடாவின் ஓய்வூதியத் திணைக்களத்தினால் இவ்வாறு சாட்ஸ் உயிரிழந்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியிருப்பதாகவும் சாட்ஸ் தெரிவிக்கின்றார்.

ஆவணங்களில் தவறுதலாக பதிவு செய்யப்பட்ட காரணத்தினால் பெரும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கி வருவதாக சாட்ஸ் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, தவறுதலாக இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் இந்த பதிவுகள் திருத்தப்படும் எனவும் அரசாங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.