உயர் மின்கம்பத்துடன் மோதிய மோட்டார் வாகனம்; நால்வர் படுகாயம்!

0
107

பண்டாரகம கெஸ்பேவ வீதியில் அலோதியாவ பிரதேசத்தில் மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி உயர் மின்கம்பத்துடன் மோதி பாரிய  விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், குறித்த விபத்தில் சாரதி உட்பட நால்வர் படுகாயமடைந்ததுடன் அவர்கள் அனைவரும் 1990 சுவசெரிய நோயாளர் காவு வண்டி மூலம் பண்டாரகம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து சம்பவம் நிகழ்வொன்றில் கலந்து கொண்ட சிலரை அழைத்துக் கொண்டு பண்டாரகமவில் இருந்து கெஸ்பேவ நோக்கி சென்று கொண்டிருந்த போதே இடம்பெற்றுள்ளது.

மோட்டார் வாகனம் மோதியதில் உயர் மின் கம்பம் பல பகுதிகளாக உடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருளில் மூழ்கிய கிராமம்! பண்டாரகம வீதியில் பயங்கர விபத்து | Village In Darkness Accident On Bandaragama Road

இந்த விபத்தில் மோட்டார் வாகனம் முன்பகுதி பலத்த சேதமடைந்தது. சாரதியின் உறக்கமே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.

இருளில் மூழ்கிய கிராமம்! பண்டாரகம வீதியில் பயங்கர விபத்து | Village In Darkness Accident On Bandaragama Road
இருளில் மூழ்கிய கிராமம்! பண்டாரகம வீதியில் பயங்கர விபத்து | Village In Darkness Accident On Bandaragama Road

மேலும், விபத்தின் காரணமாக பல பாகங்களாக உடைந்த மின்கம்பத்தை அகற்றி அதனை சீரமைக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக பண்டாரகம வெல்மில்ல பிரதேசத்தில் பல மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் பண்டாரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.