கொழும்பு கடற்பகுதியில் திடீர் அதிசயம்! வைரலாகும் காணொளி

0
619

ஒளி

கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் உள்ள கடல் பகுதியில் திடீரென ஒளி ஒன்று தோன்றியுள்ளதென தெரியவந்துள்ளது.

சமூக ஊடகங்களில் இலங்கையர் ஒருவர் பகிர்ந்துள்ள காணொளியின் ஊடாக இந்த தகவல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பயோலுமினென்சென்ஸ் எனப்படும் ஒரு உயிரினத்தால் ஒளியின் உற்பத்தி மற்றும் உமிழ்வு நிகழ்வே இந்த மாற்றத்திற்கு காரணம்  என தெரியவந்துள்ளது.

கொழும்பு கடற்பகுதியில் நடந்த அதிசய சம்பவம்! வைரலாகும் காணொளி | Miraculous Incident Place In The Sea Of Colombo

காலிமுகத்திடலுக்கு செல்லும் பொதுமக்கள் இந்த அரிய சந்தர்ப்பத்தை பார்வையிடுவதற்கான சந்தரப்பத்தை பெறுவார்கள் என இது தொடர்பான காட்சிகளை பகிர்ந்து கொண்ட இலங்கை கடல்வாழ் உயிரியலாளர் ஆஷா டி வோஸ் குறிப்பிட்டுள்ளார்.

நீரின் மேற்பரப்பில் அடர்த்தியான அடுக்குகளில் Dinoflagellates பூக்கின்றன

அவை பகல் நேரத்தில் கடலில் சிவப்பு மற்றும் பழுப்பு நிறத்தையும் இரவில் அவை அலைகளில் பயணம் செய்யும் போது பிரகாசமான, நீல நிறத்தையும் தருவதாக தெரிவிக்கப்படுகிறது.