எகிறும் முட்டையின் விலை

0
283

நாட்டில் முட்டையின் விலை 75 ரூபாய் வரை உயரும் என தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் பேராசிரியர் எச்.டபிள்யூ. சிரில் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சூழ்நிலையின் விளைவாக கோழி உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் சோளம் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும், இதனால் கால்நடை தீவன விலை உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மீண்டும் அதிகரிக்கும்  முட்டை விலை! | Egg Prices Will Increase Again

இதன் காரணமாக முட்டை விலை உயர வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முட்டை உற்பத்திக்கான செலவு

ஒவ்வொரு முட்டையின் உற்பத்திக்கான செலவு 48 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கால்நடை உற்பத்தி சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு முட்டை விற்பனை செய்வதில் சிக்கல்கள் இருப்பதாக அவர் வலியுறுத்தினார்.

மீண்டும் அதிகரிக்கும்  முட்டை விலை! | Egg Prices Will Increase Again

முட்டைக் கோழிகள் இறைச்சிக்காக விற்கப்படும் நிலை

தற்போது முட்டைக் கோழிகள் இறைச்சிக்காக விற்கப்படும் நிலை உள்ளது எனவும், முட்டை உற்பத்தி குறையும் போது தட்டுப்பாடு ஏற்பட்டு முட்டை விலையில் அதிகரிப்பு ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீண்டும் அதிகரிக்கும்  முட்டை விலை! | Egg Prices Will Increase Again

அதேசமயம் , வர்த்தமானி மூலம் அரிசியை கால்நடை தீவனமாக பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு நிறுவனத்தையும் கணக்கில் எடுத்துக்கொண்டு ஒன்றாக முடிவெடுப்பது சிறந்ததென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.