கனடாவில் இருந்து பல லட்சம் பணத்தை அனுப்பியதாக கூறிய நபர்! ஏமாந்து போன முதியவர்..

0
86

வெளிநாட்டு எண்ணில் இருந்து போன் அழைப்பால் வயதான நபர் ஒரு பெரியளவில் பண மோசடிக்கு ஆளாகியுள்ளார்.

இந்தியாவின் லூதியானாவை சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் பொலிசில் அளித்த புகாரில் என் மாமனார் ராஜேந்தருக்கு சமீபத்தில் வெளிநாட்டு எண்ணில் இருந்து போன் வந்தது.

அதில் பேசியவர் என் நண்பர் எனவும் கனடாவில் இருந்து பேசுவதாகவும் தெரிவித்திருக்கிறார். பின்னர் ராஜேந்திரன் வங்கி கணக்குக்கு ரூ 14.5 லட்சம் அனுப்ப வேண்டும் எனவும் அந்த பணத்தை தனது குடும்பத்தாரிடம் கொடுத்துவிடுமாறும் போனில் பேசியவர் கூறினார்.

அதன்படி என் மாமனாரின் வங்கி கணக்கை வாங்கி கொண்டு பணத்தை அனுப்பிவிட்டதாக கூறி தொடர்பை துண்டித்திருக்கிறார். பின்னர் மீண்டும் ஒரு போன் வந்திருக்கிறது அதில் பேசியவர் உங்களுக்கு லட்சக்கணக்கில் பணத்தை அனுப்பியவரின் நண்பருக்கு அவசரமாக ரூ 50,000 தேவைப்படுவதாக கூறி உடனே அனுப்ப சொன்னார்.

இதையடுத்து தனக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியவர் தொடர்பானவர் தானே பணம் கேட்கிறார் என நம்பி அவருக்கு ரூ 50,000 அனுப்பினார். பின்னர் மீண்டும் ரூ 1.50 லட்சம் கேட்க ராஜேந்திரனுக்கு சந்தேகம் வந்து தனது வங்கிக்கணக்கு குறித்து விசாரித்த போது ரூ 14.5 லட்சம் வரவேயில்லை என தெரிந்து அதிர்ச்சியடைந்தார் என தெரிவித்துள்ளார்.

இந்த பலே மோசடி தொடர்பாக பொலிசார் சவுரவ் குமார் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.