வரலாறு காணாதளவு சரிந்த இந்திய ரூபா

0
67

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் 39 சதங்கள்; சரிந்து 81 ரூபாய் 18 சதங்களாக இருந்தது.

வரலாற்றில் இல்லாதளவு சரிந்த  இந்திய ரூபாயின் மதிப்பு | Value Indian Rupee Has Fallen Lowest

 முன்னெப்போதும் இல்லாத அளவு  சரிவு

அதேவேளை அமெரிக்க டொலர் மதிப்பு 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டியதால், இந்திய ரூபாய் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சரிவை சந்தித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று முன்தினம் அன்னிய செலாவணி சந்தையில் 79.96 ரூபாயாக முடிவடைந்தது. நேற்று சந்தையில் ரூபாய் மதிப்பு 80.27 ரூபாய் என்ற அளவில் தொடங்கியது.

வரலாற்றில் இல்லாதளவு சரிந்த  இந்திய ரூபாயின் மதிப்பு | Value Indian Rupee Has Fallen Lowest

அது மேலும் வீழ்ச்சி அடைந்து 80.95 ரூபாய் அளவுக்கு சென்றது. இறுதியாக, 80.86 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. நேற்று முன்தினத்துடன் ஒப்பிடுகையில், இது 90 சதங்கள் அதிகம்.

ஒரே நாளில், டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90 சதங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது முன்எப்போதும் இல்லாத வீழ்ச்சி ஆகும்.

வரலாற்றில் இல்லாதளவு சரிந்த  இந்திய ரூபாயின் மதிப்பு | Value Indian Rupee Has Fallen Lowest

அமெரிக்க ரிசர்வ் வங்கி நேற்று கடன்களுக்கான வட்டி வீதத்தை 75 அடிப்படை புள்ளிகள் உயர்த்திய நிலையில்  இது மூன்றாவது உயர்வாகும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.